ஹைதராபாத்: கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இதன் படப்பிப்பில் ஆகஸ்ட் மாதம் கமல் கலந்து கொள்ள இருக்கிறார் என்கிறார்கள். “கமல் இந்தப் படத்தில் நடிப்பது உறுதி. அவர் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆகஸ்ட் மாதம் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார்’ என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago