''திருமணமான 3ம் நாளில் இருந்து கேட்க தொடங்கியது'' - 11 வருடங்களுக்கு பின் தந்தையான மகிழ்ச்சியில் ராம் சரண்

By செய்திப்பிரிவு

தெலுங்கு நடிகர் ராம் சரண் தந்தை ஆக போகிறார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். இவரும் தந்தையை போலவே தெலுங்கு சினிமா உலகில் கோலோச்சி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் வரை சென்றது. இதையடுத்து ராம் சரண் புகழ் அதிகரித்துள்ளது. ஹாலிவுட்டில் அவர் ஒருபடம் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சந்தோஷத்துக்கு மத்தியில் தந்தை ஆகும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார் ராம் சரண்.

அப்போலோ மருத்துவ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபசனாவே ராம் சரண் மனைவி. இவர்களுக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது கர்ப்பம் தரித்துள்ளார் ராம் சரண். டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு உபசனா அளித்து பேட்டியில் 11 வருட மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, ராம் சரண், தாமதமான கர்ப்பம் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசியுள்ளார்.

"ராம் சரண் உடனான திருமணமான மூன்றாவது நாளிலிருந்தே நான் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர். ஆனால், எனது கரியரை தேர்வு செய்வதில் தொடங்கி பல விஷயங்களில் சரண் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அதுக்கும்மேலாக எங்களின் ரிலேஷன்ஷிப்பை மேம்படுத்துவதில் ராம் சரண் கூடுதல் கவனம் செலுத்தினார். தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது எங்கள் இருவரின் முடிவே. இது மனப்பூர்வமாக எடுத்த முடிவு. இப்போது பெற்றோர் ஆக வேண்டும் என்பதையும் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம். கர்ப்பம் அடைந்ததை முதலில் ராம் சரணிடம் சொன்னபோது என்னை அமைதியாக இருக்க சொன்னவர், அனைத்து சோதனைகளையும் செய்து உறுதியான பின்பே அவர் இதனை கொண்டாடினர்.

கர்ப்ப காலத்தை அனுபவித்து வருகிறேன். இந்த சமயங்களில் சரணுக்கும் எனக்கும் பல சிறந்த விஷயங்கள் நடந்தன. ஆர்ஆர்ஆர் படத்துக்கான கோல்டன் குளோப் விருதுகள், ஆஸ்கர் விருதுகள் நான் கர்ப்பம் அடைந்த சமயத்தில் கிடைத்ததும் எங்களை கூடுதலாக உற்சாகப்படுத்தியது" என்று உபசனா மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்