ஜூன் 23-ல் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சுந்தர்.சி நடித்துள்ள ‘தலைநகரம் 2’ படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் 'தலைநகரம்'. சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் சுந்தர்.சியுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கெட்டப் மற்றும் காமெடி பெரும் பிரபலமானது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தலைநகரம் 2’ உருவாகியுள்ளது. ‘முகவரி’, ’தொட்டி ஜெயா’ ஆகிய படங்களை இயக்கிய VZ துரை இயக்கியுள்ளார். ரைட் ஐ சார்பாக எஸ்.எம். பிரபாகரன் இப்படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் சுந்தர்.சி தவிர்த்து, பாலக் லால்வானி, தம்பி ராமையா, 'பாகுபலி' பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்