ரூ.2,000-க்கு விற்கப்படும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ டிக்கெட்டுகள்

By செய்திப்பிரிவு

டெல்லி: டெல்லியில் உள்ள திரையரங்குகளில் பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் டிக்கெட்டுகள் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானபோது, அதன் மோசமான கிராபிக்ஸால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. இதன் எதிரொலியாக படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேலும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து படக்குழு புதுப்பித்தது. இதனால், கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள பிவிஆர் வேகாஸ் லக்ஸ் திரையரங்கில் முதல் காட்சிக்கான டிக்கெட் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இருப்பினும், அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.

மேலும் நொய்டாவில், PVR Gold Logix City Center-ல் டிக்கெட்டுகள் 1650 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. அதேபோல மும்பையில் உள்ள பிவிஆர், லக்ஸ், திரையரங்குகளில் ரூ.2,000 வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அவையும் தீர்ந்துள்ளன. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை ‘ஆதிபுருஷ்’ படத்துக்கான டிக்கெட் விற்பனை என்பது மந்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்