‘கீதா கோவிந்தம்’ பட இயக்குநருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணையும் பெயரிடப்படாத புதிய படத்தின் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் ‘கீதா கோவிந்தம்’. கோபி சுந்தர் இசையமைத்திருந்த இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநர் பரசுராமுடன் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார் விஜய் தேவரகொண்டா.
இந்தப் படத்தை தில்ராஜு தயாரிக்கிறார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்கிறார். படத்துக்கு கோபிசுந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
» திண்டுக்கல் லியோனியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘அழகிய கண்ணே’
» சரத்குமார், விதார்த் நடிக்கும் ‘சமரன்’ - முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
‘லைகர்’ பட தோல்விக்குப் பிறகு கதைகளை நடிகர் விஜய் தேவரகொண்டா கவனத்துடன் தேர்ந்தெடுத்து வருகிறார். அவர் சமந்தாவுடன் தற்போது நடித்து வரும் ‘குஷி’ படத்திற்கு பிறகு, 2019-ல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago