திண்டுக்கல் லியோனியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘அழகிய கண்ணே’

By செய்திப்பிரிவு

சென்னை: பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘அழகிய கண்ணே’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அழகிய கண்ணே’. எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.விஜயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் லியோனி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் லியோனி பேசியதாவது: “விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி. நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தார். பல முயற்சிகள் செய்தார். அவர் உழைப்புக்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”. இவ்வாறு லியோனி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்