சரத்குமார், விதார்த் நடிக்கும் ‘சமரன்’ - முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: சரத்குமார், விதார்த் இணைந்து நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சமரன். இதில் சரத்குமார், விதார்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை M360° ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது. தற்போது இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இப்படத்தில் சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி இருவரையும் சுற்றி நடக்கும் கதையே ‘சமரன்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது. குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, வேத் சங்கம் சுகவனம் இசையமைக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்