மும்பை: நடிகை தமன்னா, ரஜினியின் ‘ஜெயிலர்’படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடர் நெட்பிளிக்ஸில் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. அதுபற்றி அவர்கள், வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தமன்னா, இப்போது அளித்துள்ள பேட்டியில் காதலை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவருடன் காதல் வந்துவிடும் என நினைக்கவில்லை. ஒருவருடன் காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டும். அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம். எனக்கு அவர் மீது ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படப்பிடிப்பில் காதல் ஏற்பட்டது. நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் அவர்தான் என்பதை உணர்ந்தேன். சரியான நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அவருடனான புரிதல் அவசியம். அதை விஜய் வர்மாவிடம் கண்டேன்.அவர் என் மகிழ்ச்சியின் இடமாக மாறிவிட்டார்.
இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago