மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கொடி பறக்குற காலம் வந்தாச்சு’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் நடிகர் வடிவேலுவின் லுக் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் நீக்கமற நிறைந்துள்ளது. மேலும் படத்தின் அனைத்து பாடல்களும் அண்மையில் வெளியான நிலையில், தற்போது ‘கொடி பறக்குற காலம் வந்தாச்சு’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடலை பொறுத்தவரை இந்தப் பாடல் கீர்த்தி சுரேஷுக்கானதாக இருக்கும் எனத் தெரிகிறது. யுகபாரதி வரிகளில் கல்பனா ராகவேந்தர், ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ், அபர்ணா ஹரிகுமார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அரசு கலைக் கல்லூரியில் கீர்த்தி சுரேஷ் நடனமாடும் வகையில் லிரிக்கல் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. ‘நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு’ வரிகள் மூலம் பெண் விடுதலைக்கான பாடலாக இப்பாடல் உருவாகியிருப்பதாக உணர முடிகிறது. படம் வரும் ஜூன் 29-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. வீடியோ:
» இந்தியில் அறிமுகம் ஆகிறார் நடிகர் சூர்யா?
» பிரபல ஹாலிவுட் நடிகர் ட்ரீட் வில்லியம்ஸ் சாலை விபத்தில் மரணம்
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago