இந்தியில் அறிமுகம் ஆகிறார் நடிகர் சூர்யா?

By செய்திப்பிரிவு

பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் நடிகர் சூர்யா இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு உறுதியாகும்பட்சத்தில் சூர்யாவின் முதல் இந்திப் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் பான் இந்தியா முறையில் பிரமாண்ட பொருட்செலவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் படத்திலும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வெற்றிமாறன் ‘விடுதலை’ இரண்டாம் பாகத்துக்கான பணிகளில் பிஸியாக இருப்பதால் படத்துக்கு காலதாமதமாகி வருகிறது.

இதனிடையே, நடிகர் சூர்யா பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் ‘கர்ணா’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில், ‘ரங் தே பசந்தி’, ‘டெல்லி 6’, ‘தூஃபான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராகேஷ் ஓம்பிரகாஷ். அவர் அடுத்து இயக்கும் ‘கர்ணா’ படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலைவயில், இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக இப்படம் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்