நடிகர் மகேஷ்பாபு - ராஜமவுலி இணையும் புதிய படத்துக்கான பணிகள் மகேஷ்பாபுவின் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.
‘சர்காரு வாரி பாட்டா’ படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு தற்போது நடித்து வரும் படம் ‘குண்டூர் காரம்’. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் ராஜமவுலியுடன் இணைகிறார்.
‘ஆர்ஆர்ஆர்’ என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பின்னர் இயக்குநர் ராஜமவுலி மகேஷ்பாபு நடிக்கும் படத்துக்கான கதையை எழுதி வருகிறார். படத்தில் மகேஷ்பாபு அனுமானின் குணாதிசயங்களையொட்டிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் பூஜை மகேஷ்பாபுவின் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும், படம் ஆப்பிரிக்க காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago