நடிகர் விஜய் சேதுபதி, பி.ஆறுமுக குமார் இயக்கும் படத்துக்காக மலேசியா சென்றுள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இதற்கிடையே விஜய் சேதுபதி நடித்து வரும் இந்தி படம், ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இதில் அவர் ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிக்கிறார். ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.
தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். இவர், இந்தியில் ‘ஜானி கட்டார்’, ‘ஏஜென்ட் வினோத்’, ‘பட்லாபூர்’, ‘அந்தாதுன்’ உட்பட சில படங்களை இயக்கியவர்.
இந்தப் படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாவதாக இருந்தது. சில காரணங்களால் இதன் வெளியீடு வரும் டிசம்பருக்கு தள்ளிப் போயிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில், ராதிகா ஆப்தே நடிக்கிறார். அவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago