ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா!

By செய்திப்பிரிவு

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில், அவரது மகனும் தற்போதைய ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹி வி ராகவ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘யாத்ரா’ (Yatra). ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தவிர சுபாஷினி, ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி பெற்றதையடுத்து இதன் அடுத்த பாகம் ‘யாத்ரா 2’ உருவாக உள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய மஹி வி ராகவ் இந்தப் பாகத்தையும் இயக்குகிறார். இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனான தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜீவா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாகத்தில் மம்மூட்டியும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

மேலும்