ரபாட்: பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘கிளாடியேட்டர் 2’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் படக்குழுவினர் பலரும் காயமடைந்துள்ளனர்.
2000ஆம் ஆண்டு ரஸ்ஸல் க்ரோ நடிப்பில் வெளியான படம் ‘கிளாடியேட்டர்’. பண்டைய ரோமப் பேரரசு காலகட்டத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தை ரிட்லி ஸ்காட் இயக்கியிருந்தார். இப்படம் இன்றுவரை வெளியாகும் வரலாற்று பின்னணி கொண்ட படங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ரிட்லி ஸ்காட் இயக்கும் இப்படத்தில் ரஸ்ஸல் க்ரோ, ஹாக்கின் ஃபீனிக்ஸ் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மொராக்கோ நாட்டில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த பெரும் விபத்தில் ஏராளமான படக்குழுவினர் காயமடைந்தனர். இதனை பாராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். விபத்தை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாராமவுண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago