விஜய் தேவரகொண்டா மீது நடிகை புகார்

By செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ். ‘புஷ்பா’ படத்தில் சுனில் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம். விஜய் தேவரகொண்டாவின் 'அர்ஜுன் ரெட்டி’, ‘லைகர்’ படங்கள் வெளியானபோது, அதை விமர்சித்திருந்தார். இதனால் அனசுயாவை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இப்போது ‘குஷி’ படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டாவின் போஸ்டர் குறித்தும் கருத்துத் தெரிவித்தார் அனசுயா. இது சர்ச்சையானது. இந்நிலையில், இருவருக்குமான பிரச்சினை பற்றி அனசுயா கூறியதாவது:

நாங்கள் நண்பர்களாகத்தான் இருந்தோம். ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியான போது, படத்தில் சில மோசமான வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டன. அவர் திரையரங்குகளுக்குச் செல்லும்போது ரசிகர்கள் அந்த வார்த்தைகளைக் கூறினர். ஒரு தாயாக அது என்னைக் காயப்படுத்தியது. அது போன்ற வார்த்தைகளைப் பேச ரசிகர்களை ஊக்குவிக்காதீர்கள் என்று அவரிடமே சொன்னேன். பிறகு சமூக வலைதளங்களில் அவர் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டேன். பின்னர் அதை மறந்துவிட்டேன்.

அடுத்து எனக்கு எதிராக அவதூறு பரப்ப, அவர் தரப்பில் இருந்து பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன். விஜய் தேவரகொண்டாவுக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது. அவருக்கு என் மீது வெறுப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. எனக்கு மன அமைதி தேவை என்பதால் இதில் இருந்து விடுபட்டு, அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டேன். இவ்வாறு அனசுயா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்