சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் விதார்த்தின் லாந்தர்

By செய்திப்பிரிவு

நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் படத்துக்கு 'லாந்தர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் இதை தயாரிக்கிறார். படத்தை சாஜி சலீம் இயக்குகிறார். இவர் ‘முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவரின் முதல் படமான ‘விடியும் வரை காத்திரு’ இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கின்றன. ‘லாந்தர்’ படத்தில் விதார்த்துடன் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உட்பட பலர் நடிக்கின்றனர். ஞானசவுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் இசையமைக்கிறார்.

படம்பற்றி இயக்குநர் சாஜி சலீம் கூறும்போது, “இது வரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் உருவாகிறது. புதுமையான கதைக்களத்தைக் கொண்ட படம் இது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. படப்பிடிப்பு கோவையில் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE