தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்துக்கு ‘பகவந்த் கேசரி’ (Bhagavanth Kesari) என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்துக்கு ‘பகவந்த் கேசரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகும் இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இந்தப் படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாக உள்ளது. அதற்கு சான்றுதான் டைட்டிலின் கீழே எழுதப்பட்டுள்ள டேக் லைன். அதில், ‘ஐ டோன் கேர்’ என்ற வாசகம் பாலகிருஷ்ணாவின் படத்துக்கான முத்திரையை அழுத்தமாக பதியவைத்துள்ளது.
முதல் தோற்றம் எப்படி? - படத்தின் முதல் தோற்றத்தை பொறுத்தவரை வழக்கமாக கையில் கதாயுதம் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்யும் பாலகிருஷ்ணா இம்முறை அதேபோன்ற வடிவத்தை கொண்ட ஆயுதம் ஒன்றை பூமியில் நிலைநிறுத்தி ஆக்ரோஷத்துடன் ஸ்டைலாக நின்றுகொண்டிருக்கிறார். அந்த ஆயுதத்தை பூமியில் குத்தி வேகத்தில் சுற்றியும் புழுதி பறக்கும் வகையிலான முதல் தோற்றம் பாலகிருஷ்ணா ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். படம் தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago