விறுவிறுப்புடன் ஈர்க்கும் ஃபஹத் பாசிலின் ‘தூமம்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘தூமம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘தூமம். இந்தப் படத்தை ‘யூ டர்ன்’, ‘லூசியா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பவன்குமார் இயக்குகிறார். ஃபஹத் பாசில் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்யூ, வினீத் ராதாகிருஷ்ணன், அனு மோகன், அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூர்ணச்சந்திர தேஜஸ்வி இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ‘டோபாக்கோ வலிமிகுந்த உயிரிழப்புக்கு வழிவகுக்கும்’ என்ற ட்ரெய்லரின் தொடக்கத்தில் இடம்பெறும் வாசகமும், அடுத்து வரும் புகைப்பிடித்தல் தொடர்பான விளம்பரமும், டைட்டிலின் பின்புறத்தில் வரும் புகையும் படம் போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்பை அடிப்படையாக கொண்டு உருவாகியிருப்பதை உணரமுடிகிறது. விறுவிறுப்பாக நகரும் காட்சிகளில் ஃபஹத் பாசில் தனித்து தெரிகிறார். கடைசியில் அபர்ணா பாலமுரளிக்கு வசனம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ட்ரெய்லரும் கதையை கணிக்க முடியாத வகையில் கச்சித்தமாக த்ரில்லருடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்