‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் ஹீரோவாக நடிக்கும் ‘பர்த்மார்க்’

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்ஸிங் ரோஸாக நடித்திருந்த ஷபீர் கல்லராக்கல் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்துக்கு ‘பர்த்மார்க்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதில் இடம்பெற்றிருந்த ‘டான்ஸிங் ரோஸ்’ என்ற கதாபாத்திரம் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷபீர் கல்லராக்கல் தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு ‘பர்த்மார்க்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மிர்னா கதாநாயகியாக நடிக்கிறார். 90களில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு - கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் என்ற கிராமத்தை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஷாய் சந்திரசேகர் இசையமைக்க, உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்