சென்னை: ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் ராமராக நடித்திருக்கும் பிரபாஸுக்கு நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு திருப்பதியில் கடந்த ஜூன் 6 பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில் ‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கு நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒட்டுமொத்த ‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒரு பான் இந்திய நடிகராக இருந்துகொண்டு ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இன்றைய தலைமுறைக்கு ராமாயணத்தை கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சாதனை. படம் பிரம்மாண்ட வெற்றியடைய என்னுடைய பிரார்த்தனைகள். ஹரே ராம்.
இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago