கண்சிமிட்டும் ஐடியா யாருக்கானது?- பிரியாவை சாடிய இயக்குநர்

By செய்திப்பிரிவு

கொச்சி: ‘ஒரு அடார் லவ்’ படம் மூலம், பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இந்தப் படத்தின் பாடல் காட்சியில் அவர் கண்சிமிட்டும் காட்சி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. இதனால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தப் படத்தின், கண்சிமிட்டும் ஐடியா தன்னுடையது என்று கூறியிருந்தார். இதையடுத்து ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குநர் ஓமர் லுலு, படம் வெளியானபோது பிரியா அளித்த பேட்டியின் வீடியோவையும் இப்போது அவர் பேசிய வீடியோ கிளிப்பையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

படம் வெளியானபோது அளித்த பேட்டியில், அந்தக் காட்சிக்கு இயக்குநர்தான் காரணம் என்று பிரியா பிரகாஷ் வாரியர் கூறியிருந்தார். வீடியோவுக்கு கீழே இயக்குநர் ஓமர் லுலு, ‘பாவம், 5 வருடத்துக்கு முன் நடந்ததால் மறந்திருப்பார். அவர் மறதிக்கு ஆயுர்வேத மருந்தை முயற்சித்துப் பார்க்கலாம்” என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்