'அயோத்தி' இயக்குநரின் நெல்லை பின்னணி படம்

By செய்திப்பிரிவு

சென்னை: சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடிப்பில் உருவான படம், ‘அயோத்தி’. டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கே அடுத்த படத்தையும் இயக்குகிறார், மந்திரமூர்த்தி. மதுரைப் பின்னணியில் ‘அயோத்தி’யை உருவாக்கிய அவர், இப்போது திருநெல்வேலி பின்னணியில் அடுத்தப் படத்தை இயக்க இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE