‘தேஜாவு’ பட இயக்குநரின் ‘தருணம்’ படப் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

‘தேஜாவு’ பட இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் ‘தருணம்’ படத்தின் படப்பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன.

‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் புகழடைந்த நடிகர் கிஷன் தாஸ் நடிக்கும் புதிய படம் ‘தருணம்’. இந்தப்படத்தை ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார். படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழுடன் இணைந்து ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படப் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கின. இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய படத்தின் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன், “இன்று காலையில் எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம், எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி. தர்புகா சிவா இசையமைக்கிறார்.

அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார். என் தேஜாவு பட எடிட்டர் இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் நன்றி. தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக் கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்