கோவை: “சந்திரமுகி படம் பார்த்த பின் தான் நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தேன்” என நடிகை சுனைனா தெரிவித்துள்ளார்.
நடிகை சுனைனா நடித்த ‘ரெஜினா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சுனைனா, “2006-ல் என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்னப்பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவுக்கு வருவேனா என்றெல்லாம் தீர்மானித்து இருக்கவில்லை.
அப்போது விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம். அந்தப் படம் பார்த்த பின்பு நடிக்க வேண்டும் என தோன்றியது. தொடர்ந்து கஜினி உள்ளிட்ட படங்களை பார்த்தபோது, நான் ஒரு தென்னிந்திய மொழி நடிகையாகத்தான் ஆகவேண்டும் என முடிவு செய்தேன்.
» மலையாள சினிமாவில் சாதனை: ரூ.176 கோடி வசூலை எட்டிய ‘2018’
» Lust Stories 2 | கஜோல், தமன்னா, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ஆந்தாலஜியின் டீசர் எப்படி?
அந்த சமயத்தில் எனக்குள்ளே சினிமா குறித்த ஆர்வம் சின்சியாரிட்டி, நேர்மை எல்லாம் இருந்தது. இப்போது வரை அது இருக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ், இயக்குநர் டொமின் டி சில்வா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரிடமுமே இதேபோன்ற ஒற்றுமை இருந்தது.
இந்த நிகழ்விற்கு வெங்கட் பிரபு வந்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. அவருடைய சரோஜா படத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகை. எனக்கு எப்போதெல்லாம் மனதில் வருத்தம் தோன்றுகிறதோ அந்த சமயத்தில் சரோஜா படத்தில் வரும் பிரம்மானந்தம் சார் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து ரசிப்பேன். நான் மட்டுமல்ல.. என் குடும்பமும் சேர்ந்து தான். இந்தப் படத்திற்காக அதிக அளவில் அன்பையும் உழைப்பையும் கொடுத்துள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago