மகாபாரத தொடரில் சகுனியாக நடித்த குஃபி பெயின்டல் காலமானார்

By செய்திப்பிரிவு

தொலைக்காட்சியில் வெளியான மகாபாரத தொடரில், சகுனி மாமாவாக நடித்தவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயின்டல் (79). பகதூர் ஷா ஜாபர், கனூன், ஓம் நமசிவாயா, சி.ஐ.டி., ராதா கிருஷ்ணா உட்பட பல்வேறு தொடர்களில் நடித்துள்ள இவர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில காலமாக உடல் நலப்பிரச்சினைக்காக மும்பையில் சிகிச்சைப் பெற்று வந்தார். பத்து நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைவு இந்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE