இந்த வாரம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து பார்ப்போம்.
போர் தொழில்: சரத்குமார், அசோக் செல்வன் இணைந்து நடித்துள்ள படம் ‘போர் தொழில்’. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் , நிகிலா விமல் நாயகியாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, இப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டக்கர்: கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள ‘டக்கர்’. இந்த படத்தில் நடிகை திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருவழியாக இப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விமானம்: சிவ பிரசாத் யனலா இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் அனசுயா பரத்வாஜ் நடித்துள்ள படம் 'விமானம்'. படத்தே ஜீ ஸ்டுடியோஸூடன் இணைந்து கிரண் கொரபதி இணைந்து தயாரித்துள்ளார். மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தபடத்திற்கு சரண் அர்ஜூன் இசையமைத்துள்ளார். படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago