சென்னை: ’கேப்டன் மில்லர்’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் 50வது படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரபல அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனன்பிளிக் (Edward Sonnenblick) இந்தப் படத்தில் இணைந்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகின்றன.
இப்படத்துக்குப் பிறகு தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதனை தனுஷே இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நீண்டநாட்களாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகவும், தற்போது அவர் ஓகே சொல்லிவிட்டதாகவும் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
த்ரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர, அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் 234வது படம் ஆகியவற்றிலும் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago