மும்பை: நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயில் இருந்து மீண்ட பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் அவர், இப்போது விஜய தேவரகொண்டாவுடன் ‘குஷி’படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘சிட்டாடெல்’ வெப் தொடரின் இந்திய பதிப்பில், சமந்தா நடித்து வருகிறார். இந்தி நடிகர் வருண் தவண் உட்பட பலர் நடிக்கும் இதை, ‘தி பேமிலிமேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இந்தத் தொடரில் நடிகை சமந்தா, பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 1980, 90-களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா, வருண் தவண் நடிக்கின்றனர்.
மூத்த நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக சமந்தா நடிப்பதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். இந்தத் தொடருக்காக வருண் தவண், சமந்தா உள்ளிட்ட படக்குழு, விரைவில் செர்பியா செல்ல இருக்கிறது. அங்கு ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago