சென்னை பட விழா | தேவி | டிசம்.17 | படக்குறிப்புகள்

காலை 11.00 மணி | ROJO   | DIR: BENJAMIN NAISHTAT | ARGENTINA  | 2018 | 109'

70களில் நடக்கும் கதை. குடும்பம், நண்பர்கள் என ஒரு பிரபல வழக்கறிஞரின் வாழ்க்கை மிகச் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வெளியூரிலிருந்து ஒரு அந்நியன் அங்கு வருகிறான். அவன் வெளித்தோற்றத்திற்கு அமைதியானவன், துப்பறிவாளன். அவன் வந்தபிறகு வழக்கறிஞர் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களும் கேள்விகளும் உருவாகிறது. டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் பெற்ற படம்.

பிற்பகல் 2.00 மணி | 53 WARS / 53 WOJNY  | DIR: EWA BUKOWSKA | POLAND  | 2018 | 82

போர் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் ஒருவரின் மனைவி, எந்த மாதிரியான மன அழுத்தங்களுக்கும், அச்சத்திற்கும் ஆளாவார் என்பதை விளக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். எப்போதும் பதட்டம் மிகுந்திருக்கும் போர்ச்சூழலில் இருக்கும் கணவர், அசாதாரண நேரங்களில் வீடு திரும்புவதால் ஏற்படும் மன பாதிப்புகள் திகில் காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. தன் கணவர் போர்ச்சூழலில் கொல்லப்பட்டு விடுவாரோ என்கிற பதற்றத்திலேயே எப்போதும் இருக்கும் நாயகி நிச்சயம் நம் கவனம் ஈர்ப்பார். தன்னுடைய மன குழப்பங்களால் அவர் என்ன மாதிரியான முடிவு எடுக்கிறார் என்பதை சஸ்பென்ஸ்களுடன் படம் விவரிக்கிறது. சர்வதேச திரைவிழாக்களில் சிறந்த நடிகைக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

மாலை 4.30 மணி | TRANSIT  | DIR: CHRISTIAN PETZOLD | GERMANY | 2018 | 101'

இரண்டாம் உலகப்போரின்போது அடைக்கலம் தேடி வந்த ஜெர்மன் நாவலாசிரியர் அன்னா ஷேகர்ஸ் அனுபவத்தை அடிப்படையாக கொண்டது டிரான்சிட். ஆபத்தான காலங்களுக்குப் பிறகான அவர் வாழ்க்கையில் அமைந்த சில அற்புதமான கலை அனுபவங்களை இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய காலத்தின் கதாபாத்திரங்கள் பழைய சந்திப்புகளை பார்க்கலாம். எழுத்தாளரின் அடையாளத்தை நிறுத்தும் ஜார்ஜ் கதாபாத்திரம் ஒவ்வொரு இடத்திலும் பேசுகிறது. 1 விருது 8 பரிந்துரைகளைப் பெற்ற படம்.

மாலை 7.00 மணி | WINTER FLIES / VSECHNO BUDE | DIR: OLMO OMERZU |  / CZECH REPUBLIC |  2018 | 85'

இரு பதின்மவயது (விடலைவயது) சிறுவர்கள் மாரா, ஹீடஸ் ஆகிய சிறுவர்களுக்கு இடையே நடக்கும் உணர்ச்சிகரமான விஷயங்கள் மிகவும் நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளன. மாராவும், ஹீடஸும் வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, தங்கள் வீடுகளில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இருவரும் காரில் பயணத்தை தொடங்குகிறார்கள்.

அப்போது இரவு நேரத்தில் பயணியாக மாரா என்ற இளம் பெண் இவர்களுடன் சேர்ந்துகொள்கிறாள். இப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளவேண்டுமென்று இரு சிறுவர்களும் கானும் கனவுகளும், அதன் பின் நடந்த சம்பவங்களும்தான் கதை. சிறுவர்களுக்கே இருக்கும் குறும்புத்தனம், உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத தன்மை, ஆர்வக்கோளாறு, அப்பாவித்தனம் ஆகியவற்றை இந்த திரைப்படம் அருமையாக வெளிக்காட்டுகிறது. செக் குடியரசில் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் 2 விருதுகள் 3 பரிந்துரைகளைப் பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்