நூல் விமர்சனம்: உலகப் படச்சுருளில் ஒரு துண்டு - சர்வதேச சினிமாக்களுக்கான டைஜஸ்ட்!

By பால்நிலவன்

பரந்து விரிந்துள்ள உலக சினிமா வரலாற்றை ஒரு சிறு பிரசுரமாக தந்திருக்கிறார்கள். ஆனால் எதெல்லாம் தவறிவிடக் கூடாதோ அவற்றையெல்லாம் கவனம் எடுத்து இடம்பெறச் செய்துள்ளார்கள். அதுவே, சிறு நூல்தானே தவிர, சிறிய முயற்சியல்ல என்பதை உணர வைத்துவிட்டது.

1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உலகின் முதல் திரைப்படத்தை பிரான்ஸின் தலைநகரில் லூமியர் சகோதரர்கள் திரையிடத் தொடங்கியதிலிருந்து மிக முக்கிய இயக்குநரான மார்டின் கார்ஸசி 2016 ல் இயக்கி வெளியான சைலன்ஸ் திரைப்படம் வரை உள்ள வரலாற்றை கவனமாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர் மோகனரூபன்.

திரைப்படம் தோன்றிய காலத்தைத் தொடர்ந்து வந்த அவார்ன்ட் கார்ட் இயக்கம் குறித்த தகவல்களும் இடம்பெறச் செய்துள்ளனர். அவார்ன்ட் கார்ட் இயக்கத்தில் தோன்றியவர்தான் ஐசென்ஸ்டீன். ஐசென்ஸ்டீன் இந்த உலகிற்கு தந்த முக்கிய படங்களில் ஒன்றான பேட்டல்ஷிப் பொட்டம்கின் திரைப்படத்தில்தான் கிராஸ்கட்டுக்கு அதிகம் முக்கியத்தும் தரப்பட்டது. கிராஸ்கட் என எடிட்டிங்பிரிவில் தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிடப்படும் ஒரு வேலையைக்கொண்டு மாண்டேஜ் ஷாட் அறிமுகப்படுத்தியவர் ஐசென்ஸ்டீன். 5 நிமிடத்தில் 155 ஷாட்கள் என்ற மாண்டேஜ் அறிமுகமே சாதனையாக மாறிய வித்தையைச் செய்தவர் அவர். இதைப்பற்றிய விரிவான குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளதைக் கண்டு நம் அறிவுக் கண்களின் புருவங்கள் உயர்கின்றன.

ஒரே ஒரு இடம் சிறு திருத்தம் வேண்டியிருந்தது. அது வேறொன்றுமில்லை. nanook of the north (1922)- சிறந்த திரைப்படம் என பெட்டிச் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அது உண்மையில் ஒரு விவரணப்படம். உலகிலேயே முதல் முக்கிய விரிவான விவரணப் படம் இது. வடதுருவத்தில் பனிக்குளிரில் இக்ளூ ஐஸ்கட்டி வீடுகளில் வசிப்பவர்களைப் பற்றிய மிகச்சிறந்த உண்மைப் பதிவு.

வரலாற்றைச் சொல்கிறேன் என்று பக்கம் முழுவதும் உரைநடையை மட்டுமாகவே நிரவிவைக்கவில்லை. அங்கங்கே திரைவரலாற்றின் வழிநெடுக தடம்பதித்த திரைக்காட்சிகள், சாதித்த இயக்குநர்களின் முகங்கள், திருப்புமுனை காரணகர்த்தாக்களின் வியக்கவைக்கும் மேற்கோள்கள், சிறந்த படங்களுக்கான வருடவாரியாக ஆங்கிலப் பெயர்களுடன் கூடிய பெட்டிச் செய்திகள் என திரைவிழாவின் பார்வையாளர்களின் ஈடுபாட்டிற்கு ஏற்ப வித்தியாசங்கள் செய்துள்ளனர்.

இந்நூலில் இடம்பெற்ற நிறைய மேற்கோள்களிலிருந்து ஒரே ஒரு உதாரணம்: ''தேவைப்பட்டால் நான் நரகத்துக்குப் போய் அங்கு சைத்தானுடன் போராடி ஒரு நல்ல கதையை பிடுங்கி விடுவேன்.''- வெர்னர் ஹெர் சாக்.

கையடக்க நூலிலும் இவ்வளவு நுட்பங்களை சிறு தவறும் இன்றி பிரசுரித்த நூர்ஜின் கிராபிக்ஸிற்கு ஒரு சலாம். தகுந்த லேஅவுட் பணிகளை செய்த சிந்து பதிப்பகத்தாருக்கு நன்றி.

மேலும், உலகப் படச்சுருளில் ஒரு துண்டு என நூல் பிரதியை மோகனரூபன் எழுதியதோடு, அதை சொந்தசெலவிலேனும் பிரசுரம் செய்து பயனுள்ள தகவல்களைத் தொகுத்து அதை உலக சினிமா ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டுமென்ற அவரது உந்துதல் போற்றுதலுக்குரியது.

வலம்புரிஜான் நினைவு வெளியீடு என குறிப்பிட்டிருப்பது கிட்டத்தட்ட அவரை மறந்திருந்த இந்த நாட்களில் அவரைப் பல்வேறு நினைவுகள் மனம்கலங்க கிளறிவிடுகிறன்றன. நூல் வெளியிட உறுதுணைபுரிந்த ஓவியர் திரு வேல், திரு மு.செய்யது முகம்மது ஆசாத் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்