THE NET: மீனவர்களின் அலை(ச்சல்) வாழ்க்கையைப் பேசும் ‘கிம் கி டுக்’ திரைப்படம்

By பால்நிலவன்

||15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டிசம்பர் 18-ம் தேதி, தேவி திரையரங்கில் பிற்பகல் 2:00 மணிக்கு திரையிடப்படவுள்ள ’The Net’ படத்தை பற்றிய பார்வை||

சினிமா பார்வையாளர்களில் இன்று தவிர்க்க முடியாதவராகிவிட்டார் கிம் கி டுக். தென்கொரியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் கிம் கி டுக், 1996ல் 'குரோக்கடைல்' படத்தின்மூலம் திரை உலகில் காலடி எடுத்துவைத்தார். அவரது 'ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அன்ட்ஸ் பிரிங்' - திரைப்படம் சமூகத்தில் குற்றம் இழைக்க நேரும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் ஆன்மிக உணர்வை உயிர்பெறச் செய்யும்விதமாக அமைந்திருந்தது.

இப்படத்தில் பிரதானமாக இடம்பெற்றது ஒரு மிதக்கும் ஆசிரமம். பௌத்த பிக்குகளின் இந்த ஆசிரமம் அந்த உறைபனி ஏரியின் நடுவே அமைந்திருந்தது. இந்த உறைபனி ஏரி பருவ காலங்களுக்கு ஏற்ப உருமாறியவிதம் ஒருநாள் இல்லையெனினும் இன்னொருநாள் பக்குவப்படும் மனித மனங்களுக்கு இயக்குநர் படிமம் ஆகக் காட்டியமுறை உலக சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அவரது 3-அயர்ன், சமாரிடன் கேர்ள், அரி ராங், பயட்டா போன்ற படங்கள் வெனிஸ், பெர்லின், கேன்ஸ் திரைவிழாக்களில் சிறந்த படங்களுக்கான விருதுகளைப் பெற்றன.

இன்று திரையிடப்பட உள்ள தி நெட் திரைப்படத்தில் தென்கொரிய மீனவனின் வாழ்க்கையைத்தான் பேசியுள்ளார் இயக்குநர். ஏனோ நம்ம ஊர் மீனவர்களையும் நினைவுக்கு வரவைத்துவிடுகிறது இத்திரைப்படம்.

நாம்சுல்வூ ஓர் ஏழை மீனவர், இரண்டு கொரியாக்களை பிரிக்கும் நதியின் வடக்கே அவரது மனைவி மற்றும் மகள் ஒரு மகிழ்ச்சியான எளிய வாழ்க்கை வாழ்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் ஆற்றில் மீன்பிடிக்க செல்கிறார், நதிநீரில் சிறுதூரம் வரை மட்டுமேசென்று மீன்பிடிப்பது அவரது வழக்கம். அங்கு உள்ள கண்ணுக்கு தெரியாத எல்லையை அம்மீனவர் கடக்க மாட்டார் என்பது அங்குள்ள எல்லைப்பகுதி ராணுவத்தினரின் நம்பிக்கை. ஏனெனில் அவரை அவர்கள் நீண்டநாட்களாக கவனித்து வருகின்றனர்.

அதனால் கடலோர ராணுவத்தினர் அவருக்கு தொல்லைகள் தரமாட்டார்கள்.. ஆனால் ஒருநாள் அவரது மீன்பிடி படகு இயந்திரத்தில் ஒரு வலை சிக்கிக் கொள்கிறது. இதனால் படகு தெற்கு நோக்கி தானே வேகமாக நகர்வதை அவரால்கூட தடுக்கமுடியாத நிலை. அதன்பிறகு நிலைமை எக்கச்சக்கமாக போய்விடுகிறது. நாம்சுல்வூ எதிர்கொள்ளும் பாதுகாப்புத் துறையினரின் விசாரணைகள் யாவும் கடுமையானது. பொதுவாக மீனவர்கள் எல்லையைக் கடந்ததாக தண்டனைக்குள்ளாகும் மோசமான நிலையை இது யோசிக்க வைக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்