LOVE ME NOT | GREEK | 2017 | அண்ணா, காலை 9.30 மணி
ஒரு தம்பதியினர் ஓர் இளம் புலம்பெயர்ந்த பெண்ணை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அவரை தங்களது இரவல் தாயாக இருக்க வைத்துக்கொள்கிறார்கள். அப்பெண்ணும் இவர்களது அழகிய வில்லாவிற்கு வந்துவிடுகிறார். தம்பதிகளில் ஆண் மட்டும் வெளியே வேலைக்கு சென்றுவிட அங்குள்ள பெண்ணுடன் இந்த புலம்பெயர்ந்த பெண்ணும் நல்ல நட்புறவு கொண்டு அந்த வீட்டில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அப் பெண் மகிழ்ச்சிக்கு தள்ளப்படுவதற்குப் பின்னால் அந்த வீட்டுப் பெண் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகிறாள். இரவல் தயான அப்பெண்ணுடன் மோதலும் ஏற்படுகிறது. பிறகு அவள் காரில் செல்வதற்காக வெளியேறுகிறார். அதே இரவு அப்பெண்ணின் கணவனுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவன் மனைவி இறந்துவிட்டாள் என. அவளது எரிந்த உடல் உடைந்த காரில் கண்டுபிடிக்கப்படுகிறது.
THAT'S NOT ME | AUSTRALIA / USA / ENGLISH | 2017 | கேஸினோ, காலை 9.45 மணி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகையும் எழுத்தாளருமான ஆலிஸ் ஃபவுச்சர் நடித்துள்ள படம். இதில் அவர் ஒரே மாதிரியாக உள்ள இரட்டைச் சகோதரிகளாக நடித்துள்ளார். ஆமி, பாலி இரண்டு கதாபாத்திரங்கள். ஆமி ஒரு முக்கியப் பாத்திரம். ஒரு சினிமா நடிகையாக வருகிறார். இன்னொருவர் பாலி ஒரு சாக்லேட் பாரில் பணிபுரிகிறவர். தன்னைப் போலவே இருக்கும் ஆமி பெரிய நடிகையாக உள்ளாரே என இவருக்கு பொறாமை. ஒரு கட்டத்தில் தனது அதிஷ்டத்தை நம்பி அவர் ஹாலிவுட்டிற்கு கிளம்பிவிடுகிறார். அவரது முயற்சிகள் வியக்கத்தக்க விளைவுகளைத் தருகிறது. இரட்டைக் கதாப்பாத்திரங்கள் ஏற்று நடித்த நடிகை ஆலீஸ் ஃபவுச்சர் இப்படத்திற்கான கதை திரைக்கதையை எழுதியுள்ளார். அவரது கணவர் கிரிகோரி எர்ட்ஸ்டீன் இயக்கியுள்ளார்.
I DANIEL BLAKE / YO, DANNIEL BLAKE | ENGLISH | தேவி, பிற்பகல் 2.00 மணி
59 வயதான மரத் தச்சர் டேனியல் ப்ளாக் மராடைப்பால் பாதிக்கப்பட்டு மீள்கிறார். சிகிச்சைச்சைக்குப் பிறகு டேனியல் மீண்டும் பணிக்கு செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார். இதனைத் தொடர்ந்து டேனியலுக்கு இரு குழந்தைகளுக்கு தாயாகவுள்ள கேட்டிக்கு நட்பு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவர்களது வாழ்க்கை நகைச்சுவை, நம்பிக்கை, மனித உணர்வுகள் என தற்செயல் நிகழ்வுகளால் நகர தொடர்கின்றது.
SWEET COUNTRY | AUSTRALIA / ENGLISH | 2017 | தேவி, மாலை 4.30 மணி
ஆஸ்திரேலியாவில் பிரிவினைகள் நடந்த 1920களின் காலகட்டம். சாம் நடுத்தர வயது பழங்குடி மனிதன். சாம், நடுத்தர வயதான பழங்குடி மனிதர், ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதி மாகாணத்தில் ஒரு பிரசங்கியாக வேலை செய்கிறார். ஹாரி, ஒரு வெள்ளையின ராணுவ அதிகாரி. ஹாரி, எல்லைப்பகுதியில் அவுட்போஸ்ட் பகுதியில் மாற்றப்படும் போது, பிரசங்கர் சாம் மற்றும் அவரது குடும்பத்தை ஹாரி தனது கால்நடை வண்டிகளை புதுப்பிக்க உதவுகிறார். ஆனால் சாமின் உறவு கொடூரமான மற்றும் மோசமான மனநிலையுடன் ஹாரி விரைவாக மோசமடைகிறது, சாம் சுய பாதுகாப்புக்காக ஹாரி கொல்லும் ஒரு வன்முறை துப்பாக்கிச்சூட்டில் முடிவடைகிறது. இதன் விளைவாக, சாம் ஒரு வெள்ளை மனிதனின் படுகொலையைச் செய்த ஒரு குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார், மேலும் புகழ்பெற்ற கொடூரமான பாலைவன நாட்டினூடாக தனது மரணதண்டனைக்குள்ளாக அவரது மனைவியுடன் வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார். உள்ளூர் சட்டநிபுணர் சார்ஜென்ட் ஃப்ளெட்சர் தலைமையிலான ஒரு வேட்டைக்குழு பழங்குடியின மனிதர் சாமை கண்காணிக்க உருவாக்கப்படுகிறது. ஆனால் படுகொலை பற்றிய உண்மையான விவரங்கள் வெளிவரத் தொடங்குகின்றன, சமூகத்தில் உண்மையிலேயே நீதி வழங்கப்படுகிறதா கேள்வியும் எழத் தொடங்குகிறது..
ONE-LINE / ONE-LINE | KOREAN | 2017 | தாகூர் திரைப்பட மையம், காலை 11.15 மணி
சாதாரண பல்கலைக்கழக மாணவரான மின்-ஜாயி. அவன், வங்கித் திருட்டுக்களில் அனுபவமிக்க சுக்-கூவை சந்திக்கிறான். மின்-ஜாயி விரைவில் சுக்-கூ மற்றும் அவனது மோசடிக் குழுவில் இணைந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறான். அவர்களது கொள்ளைகூட்ட வேலைகள் நன்றாக போகின்றன. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ளவில்லை
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago