CRACKS IN THE SHELL/ DIE UNSICHTBARE |GERMAN / DANISH / CHINESE| 2011 | தேவிபாலா, காலை 11.15 மணி
மிக முக்கியமான திரைப்படம். நாம் சாதாரணமாக ரசித்துவிட்டுப்போகும் படைப்புகளில் பங்கேற்கும் கலைஞர்கள் உளவியல் ரீதியாக எவ்வளவு ஆழமாக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதை ஆழமாக சொல்லியுள்ளார்கள். ஃபைன் திறமையான நடிப்பு மாணவி. ஆனால் கூச்சமுடையவள். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரி ஜூலை பார்த்துக் கொள்ள, அவளை தூங்க வைக்க பாடுவது, ஆடுவது, நடிப்பது என தனது திறமைகளை பயன்படுத்துகிறாள். ஆனால் பள்ளியிலோ அவள் தன்னம்பிக்கையின்றி இருக்கிறாள். புகழ்பெற்ற இயக்குநர் காஸ்பெர் ஃபீர்ட்மென் தனது அடுத்த படத்துக்கான நடிகை தேர்வை வைக்கிறார். ஃபைன் தனது திறமையால் அவரை ஈர்க்கிறாள். ஃபைனின் பாதிக்கப்பட்ட ஆளுமையும், குணமும், தனது அடுத்த படைப்பின் மைய கதாபாத்திரத்தைப் போலவே இருப்பதாக காஸ்பர் நினைக்கிறார். ஃபைனுக்கு அந்த பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஃபைன் நடிப்புக்காக தனது அடையாளத்தையே இழந்து அந்த பாத்திரமாகவே மாறுகிறாள். இது அவளது சகோதரியை பார்த்துக் கொள்வதிலும் எதிரொலிக்கிறது. இந்த ஆபத்தான விளையாட்டில் ஃபைனுக்கு, ஃபைனே எதிரியாக மாறுகிறாள். உலகத் திரைவிழாக்களில் விருதுகளை வென்றவண்ணம் உலாவந்துகொண்டிருக்கிறது இத்திரைப்படம்.
KATIE SAYS GOODBYE | ENGLISH | தேவி, மாலை 7.15 மணி
main content - KATIE SAYS GOODBYEpng100
கேட்டீ, ஓர் இளம் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த பெண். சான் பிரான்சிஸ்கோவில் வாழ்வது குறித்த கனவை அவள் காண்கிறாள். தன் முதல் காதலோடு வாழ்கிறாள். ஆராய்ந்து நேர்மையாய் தன்னைத்தானே நிராகரிக்கிறாள். கஷ்டப்படும் மற்றவர்களுக்கா இரங்கும் அவளது குணமே அவளை எளிதாக இரையாக்கிவிடுகிறது. அவளது விடாமுயற்சியும் மற்றும் இளமையும் அவள் மிகவும் நேசிப்பவர்களால் மிகவும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.
THE BLACK CROW / SIYAH KARGA | KURDISH / TURKISH | கேஸினோ பகல் 12.15 மணி
main content - THE BLACK CROWjpg100
தனது தாய் நாடான ஈரானிலிருந்து வெளியேறிய பெண் இளம் பெண் சாரா, பாரஸில் திரைப்பட நடிகையாக பிரபலமாகிறார். இந்த நிலையில் அவருக்கும் ஈரானிலிருந்து கடிதம் ஒன்று வருகிறது. அதனைத் தொடர்ந்து சாரா ஈரான் செல்ல முடிவு எடுக்கிறார். ஆபத்துக்கள் நிறைந்த துருக்கியின் எல்லையின் வழியே ஈரான் செல்ல சாரா முடிவெடுக்கிறார். இந்த ஆபத்துகளை கடந்து அவர் தனது சொந்த நாடான ஈரான் செல்கிறாரா என்பதை கூறுகிறது தி ப்ளாக் க்ரோ என்ற திரைப்படம்
DAYBREAK / DITA ZE FILL | ALBANIAN | கேஸினோ 7.00 மணி
main content - DITA ZE FILLjpg100
லெதாவுக்கு பல மாதங்கள் வாடகைக்கு பணம் செலுத்த முடியவில்லை. அவளும் அவளுடைய ஒரு வயது மகனும் தங்கள் அபார்ட்மெண்ட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது, சோஃபி என்ற ஒரு வயதான பெண்மணியை பார்த்துக்கொள்ளும் வேலையை ஏற்றுக்கொள்கிறாள். அவளை வேலைக்கு வைத்துக்கொண்டதோடு, அவளுக்குதேவையான உதவிகளையும் செய்கிறாள் வயதான சோபியின் மகள். சோஃபி எனும் வயதான பெண்மணியை நன்றாகப் பார்த்துக்கொண்டாள் போதும் லெதாவுக்கு. அவளுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற நிலை உருவாகிறது.
BECAUSE I LOVE YOU / SARANGHAGI TTAEMOONE | KOREAN | அண்ணா | பகல் 12 மணி
main content - BECAUSE I LOVE YOUjpg100
லீ ஹையோங் அற்புதமான பாடலாசிரியர், பாடகர், ஒரு எதிர்பாராத விபத்தில் இறந்தபிறகு அவரது ஆவி சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. பாடலாசிரியரின் ஆவி அன்பின் தூதனாக மாறி, அன்பைக் கண்டறிந்து, காதல் உணர்ச்சிகளில் சிக்கியுள்ளவர்களை இணைப்பதற்கான சக்தியைப் பெறுகிறார். ஒரு நபரின் உடலில் நுழைந்து அவரது காதல் கைகூடும் நிலையில் அந்நபரிடமிருந்து விடைபெறுகிறார். அழகான காதல் கதைகளை உள்ளடக்கிய இப்படம் வித்தியாசமான பொழுதுபோக்குத் திரைக்கதையைக்கொண்டது. பாடலாசிரியர்கள் எப்பொழுதும் காதலுக்கு துணைநிற்பார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம்.
ASPHYXIA / KHAFEGI | HUNGARIAN | தாகூர் திரைப்பட மையம், காலை 11.15 மணி
main content - ASPHYXIApng100
ஒரு மனநல மருத்துவமனையின் செவிலியர் ஒரு பணக்கார மனநலம் குன்றிய நோயாளிப் பெண்மணியைச் சந்திக்கிறார், குடும்பமோ அப்பெண்மணியைக் கொல்லவும், அவரது செல்வத்தை எடுத்துக் கொள்ளவும் விரும்புகிறது. பலியாக உள்ள மனநலம் குன்றிய பெண்ணின் பக்கமா? அல்லது அப்பெண்மணியின் குடும்பத்து பக்கமாக யார் பக்கம் இருந்து இப்பிரச்சனையை பார்ப்பது என செவிலியர் குழம்புகிறார். இதன்பிறகு அவர் ஒரு விசித்திரமான முடிவுக்கு வருகிறார்.
BRIGHT NIGHTS / Helle Nächte | GERMAN | தாகூர் திரைப்பட மையம், பிற்பகல் 2.15 மணி
main content - BRIGHT NIGHTSjpg100
பல வருடங்கள் நிர்க்கதியாக விட்டுவிட்டு, காணாமல் போன ஒரு தந்தை மைக்கேல். 14 வருடங்கள் கழித்து அவரது மகன் லூயி உடனான உறவை புதுப்பிக்க நினைக்கிறார். அதற்காக இருவரும் நார்வேயை சுற்றி கார் பயணம் மேற்கொள்கின்றனர். அதில் மைக்கேல் நினைத்தது நடந்ததா? மைக்கேலின் தந்தைக்கும், அவருக்குமான உறவுக்கும், லூயிக்கும் மைக்கேலுக்கான உறவுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன?
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago