59 உதவி ஜெயிலர் பதவிக்கு ஜூலை 1-ல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமாமகேஸ்வரி நேற்று வெளியிட்டஅறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் சிறை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்) பதவியில் 54 காலியிடங்களும், உதவி ஜெயிலர் (பெண்) பதவியில் 5 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப் படிப்பு தேர்ச்சி ஆகும்.

வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தகுதியுடைய நபர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி மே மாதம் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 1-ம் தேதி காலையும் பிற்பகலும் நடைபெறும்.

தேர்வுமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம், உடற்தகுதி உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். சிறைத்துறையில் நேரடியாக உதவி ஜெயிலர் பணியில் சேருவோர் டிஐஜி வரை படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

6 days ago

வேலை வாய்ப்பு

10 days ago

வேலை வாய்ப்பு

16 days ago

வேலை வாய்ப்பு

17 days ago

வேலை வாய்ப்பு

17 days ago

வேலை வாய்ப்பு

17 days ago

வேலை வாய்ப்பு

18 days ago

வேலை வாய்ப்பு

26 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்