எம்எஸ்எம்இ சார்பில் ஒப்பனை பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் சார்பில், தொழில்முறை ஒப்பனை பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

ஏப்.24 முதல் 28-ம் தேதிவரை 5 நாட்களில் காலை 10 முதல் மதியம் 1.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். அழகுக் கலை குறித்த வரலாறு, அழகுக் கலைக்கான வேலைவாய்ப்பு, சிகை அலங்காரம், அடிப்படை முதல் அட்வான்ஸ்டு அலங்காரம், மணமகன் மற்றும் மணமகள் அலங்காரம் உள்ளிட்ட அழகுக் கலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் பங்கேற்கலாம். இப்பயிற்சி செய்முறை விளக்கத்துடன் நடைபெறும். வேலைக்குச் செல்லவும், சுயமாக தொழில் தொடங்கவும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பயிற்சியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-க்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணம் ரூ.7,500. பயிற்சியின் முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய 73586 73130, 90437 99135, 82483 09134 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

4 days ago

வேலை வாய்ப்பு

5 days ago

வேலை வாய்ப்பு

9 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்