ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் ரயில்வேயில் 50,000 பேருக்கு விரைவில் பணி ஆணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் ரயில்வே துறையில் விரைவில் 50,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம்தேதி ரோஜ்கர் மேளாவை (வேலைவாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடி தொடங்கினார்.

இத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் அடுத்த ரோஜ்கர் மேளா ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அப்போது ரயில்வேயில் 50,000 பேருக்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்கு முன் பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக ஏப்ரல் தொடக்கத்தில் ரோஜ்கர் மேளா நடத்தப்படும். அப்போது ரயில்வே துறையில் மட்டும் குரூப் சி பிரிவில் சுமார் 50,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படும். ரயில்வே துறை யில் மொத்தம் 3.15 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE