பயிற்றுநர் பணியிடங்களுக்கு மார்ச் 2-ல் சான்றிதழ் சரிபார்ப்பு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்செயலர் ஜெ.மேகநாத ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல் பந்து, ஜுடோ, கபாடி, கோ-கோ, நீச்சல், டென்னிஸ், டேக்வாண்டோ, கையுந்து பந்து, பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கான 87 நிரந்தர பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் மாதம் கோரப்பட்டது.

அதன் அடிப்படையில், 530-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளன. அவற்றில் முதல் மற்றும் 2-ம் நிலை தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற 189 விண்ணப்பதாரர்களுக்கு 3-ம் நிலை தேர்வாக மார்ச் 2-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகள் சென்னையில் நடைபெற உள்ளது.

எனவே, அழைப்புக் கடிதம் பெறப்பட்ட விண்ணப்பதாரர்கள் மார்ச் 2-ம் தேதி காலை 7 மணிக்குசென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்குக்கு வரவேண்டும். பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

28 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்