பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களை நிரப்ப மே மாதம் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண் ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச் 4-ம் தேதி கடைசி நாள் - ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சித் துறையில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பதவி யில் 794 காலி பணியிடங்கள் உள்ளன.

இதுதவிர, நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியில் 236, பொதுப் பணித் துறை இளநிலை வரைதொழில் அலுவலர் பதவியில் 18, நகர ஊரமைப்பு துறை வரைவாளர் நிலை பணியில் 10, தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை போர்மேன் பணியில் 25 என ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு மே 27-ம் தேதிகாலை, மாலை என இரு வேளைகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மார்ச் 9 முதல் 11-ம் தேதிஅவகாசம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறை, கல்வித் தகுதி, பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மீன்வளத் துறை உதவி ஆய்வாளர்: மீன்வளத் துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான கணினி வழி தேர்வு பிப்.7-ம் தேதி நடக்கஉள்ளது.

இத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களின் ஹால் டிக்கெட்www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE