விழுப்புரம் | மத்திய அரசு பணிகளுக்கான இலவச பயிற்சி பிப்.1-ம் தேதி

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) 12,523 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு “www.ssc.nic.in” என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும்.

இத்தேர்வுக்கான கல்வித் தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி. மேலும், 01.01.2023-ம் தேதி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதிற்குள்ளும் மற்றும் பொது பிரிவினர் 25 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணமாக ரூ. 100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள இளையோர் அதிகளவில் விண்ணப்பிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப் பித்தவர்களுக்கு 01.02.2023 காலை 10 மணியளவில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 04146 - 226417 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 94990 55906 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE