மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் மசாலா பொடிகள் தயாரிக்க 5 நாட்கள் இலவச பயிற்சி

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் மசாலா பொடிகள் தயாரிப்பதற்கான இலவசப் பயிற்சி பிப்.,6-ல் தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிக்கையில் கூறியுள்ளதாவது: மசாலா பொடிகள் தயாரிப்பது குறித்த 5 நாட்கள் இலவச பயிற்சியானது மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்.,6 முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் குழம்பு மிளகாய் பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா பொடி, பிரியாணி மசாலா பொடி, சென்னா மசாலா பொடி, கறிவேப்பிலை பொடி, இட்லி பொடி முருங்கைக் கீரை பருப்புப் பொடி உள்ளிட்ட பல வகையான பொடிகள் தயாரிப்பது குறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உரிமம் பெறுவது குறித்தும் சிறு குறுந்தொழில் தொடங்குவது குறித்தும் வங்கியில் கடன்பெறுவது குறித்தும் சந்தைப்படுத்துவது குறித்தும் நிபுணர்கள் விரிவான பயிற்சி அளிக்க இருக்கின்றனர். இப்பயிற்சியில் மதுரைமாவட்ட விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

பயிற்சி பெற விருப்பமுள்ளோர், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், மதுரை என்ற முகவரியிலும், 95241 19710 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE