நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் 10-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி ஆபரேட்டர், மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், சூபர்வைசர், கணக்காளர், காசாளர், டைப்பிஸ்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.
10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றோர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும், ஆலோசனையும் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் வரும் 10-ம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
2 days ago
வேலை வாய்ப்பு
4 days ago
வேலை வாய்ப்பு
7 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago