சேலத்தில் மார்ச் 26-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம்: சேலத்தில் வரும் 26-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-ம் தேதி சேலம்  கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவிருக்கும் முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து கல்வித் தகுதி உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE