தி.மலையில் மார்ச் 25-ல் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை: தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாமை தி.மலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 25-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்று தரும் நோக்கத்துடன் முகாம் நடத்தப்படுகிறது. வெளி மாவட்டங்களில் முன்னணி நிறுவனங்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப, தகுதியான நபர்களை தேர்வு செய்ய வுள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியாணை வழங்கப்படும்.

8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு வரை மற்றும் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், செவிலியர், முதுநிலை மேலாண்மை படித்தவர்களும் கலந்துகொள்ளலாம். 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ், கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளலாம். தி.மலை மாவட்டத்தைத் சேர்ந்தவேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்” என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE