திருச்செங்கோட்டில் 19-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: திருச்செங்கோட்டில் வரும் 19-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற உள்ளது.

முகாமில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ் வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெறலாம்.

இம்முகாமில் பங்கேற்க விரும்பும் அனைத்து வேலைநாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் அவசியம் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய பயோ-டேட்டா, உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் நேரடியாக கலந்துகொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

2 days ago

வேலை வாய்ப்பு

3 days ago

வேலை வாய்ப்பு

7 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்