சென்னை: மத்திய அரசின் ஆதிதிராவிடர் வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 800 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இந்த முகாமில் 20-க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்களும், சென்னையைச் சுற்றியுள்ள நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.
இதில் 10, பிளஸ் 2 வகுப்பு, ஏதாவது ஒரு பட்டம் அல்லது பட்டயம், ஐடிஐ, பொறியியல் பட்டம் ஆகிய கல்வித் தகுதி உடைய சென்னையைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பு மற்றும் பழங்குடியினர் மட்டுமே இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 30 வரைக்குள் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாமிற்கு வருவோர் தன் விவர குறிப்புகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் வர வேண்டும். இந்த முகாம் ஆதிதிராவிடர் வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், (சாந்தோம் சர்ச் அருகில்) சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை என்ற முகவரியில், வரும் 12 ம் தேதியன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.
தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணைப் பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி ஜி.கே.ஸ்ரீராக் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
2 days ago
வேலை வாய்ப்பு
3 days ago
வேலை வாய்ப்பு
7 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago