டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண் இணைக்க ஏப்.30 வரை அவகாசம்

By செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்கும் வகையில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அந்த பதிவோடு ஆதார் எண்ணை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் இணைக்காதவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குருப்-2, குருப்-2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்படும்.

இதைத்தொடர்ந்து, ஏராளமான தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்படி, அவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேநேரத்தில், குருப்-2, குருப்-2-ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தவறாமல் மார்ச் 23-ம் தேதிக்குள் ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து அதன்பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

ஏற்கெனவே இணைத்தவர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை.

இவ்வாறு கிரண் குராலா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

7 days ago

வேலை வாய்ப்பு

14 days ago

வேலை வாய்ப்பு

15 days ago

வேலை வாய்ப்பு

24 days ago

வேலை வாய்ப்பு

28 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்