வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு உத்தரவுப்படி, கடந்த 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படை வீரர்கள், பணி வாய்ப்பை பெறும்வகையில் பதிவை புதுப்பித்துக் கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவு செய்து, மேற்காணும் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய, மாநில அரசுத் துறையில் மறுவேலைவாய்ப்பில்லாத முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ, அடுத்தாண்டு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். தொடர்புடைய வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் நேரிலோ, ஆன்லைன் மூலமாகவோ தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

7 days ago

வேலை வாய்ப்பு

14 days ago

வேலை வாய்ப்பு

15 days ago

வேலை வாய்ப்பு

24 days ago

வேலை வாய்ப்பு

28 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்