கோவை அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற மருந்தாளுநர்கள், லேப் டெக்னீஷியன், நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கோவை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பெ.கிருஷ்ணா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், லேப் டெக்னீஷியன், நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள், கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்குத் தற்காலிகமாக மாதம் ரூ.12,000 வீதம் 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அதன்படி மருந்தாளுநர் 17 பேர், லேப் டெக்னீஷியன் 17 பேர், நுண்கதிர் படப்பிடிப்பாளர் 17 பேர் ஆகியோர் தேவைப்படுகிறார்கள். பணியிடங்களுக்குத் தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
» 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
» தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் - செப்டம்பரில் தேர்வு; விரைவில் முடிவுகள்- சிபிஎஸ்இ அறிவிப்பு
நேர்முகத் தேர்வு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்''.
இவ்வாறு பெ.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
15 hours ago
வேலை வாய்ப்பு
9 days ago
வேலை வாய்ப்பு
13 days ago
வேலை வாய்ப்பு
19 days ago
வேலை வாய்ப்பு
20 days ago
வேலை வாய்ப்பு
20 days ago
வேலை வாய்ப்பு
20 days ago
வேலை வாய்ப்பு
21 days ago
வேலை வாய்ப்பு
29 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago