துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மார்ச் 5-ம் தேதி சென்னையில் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னையில் மார்ச் 5-ம் தேதி அன்று துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் ஏ.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

''மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 05.03.2020 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை கீழ்க்காணும் முகவரியில் துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டான்சி கார்ப்பரேட் வளாகம், முதல் தளம், மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10-க்கும் மேற்பட்ட துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.

துணை மருத்துவ படிப்புகள் (Diploma in Nursing, B.Sc. Nursing, DGNM /ANM/ FNA, HIC Nurse, Diploma in Pharmacy, B Pharm, M Pharm, Pharm D , MRT Technician, DMLT, Dip.in Dialysis, B.Sc Radiology or Diploma or Equivalent, Blood storage Technician, Endoscopy Technician, B.Sc. Biochemistry / Microbiology) படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

வேலைவாய்ப்பு முகாமுக்கு வருவோர் தங்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (RESUME) கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பதிவு அவசியமில்லை.

இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி ( 044 - 22500134 ) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்”.

இவ்வாறு இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

9 days ago

வேலை வாய்ப்பு

16 days ago

வேலை வாய்ப்பு

17 days ago

வேலை வாய்ப்பு

26 days ago

வேலை வாய்ப்பு

30 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்