வரும் 31-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னையில் வரும் 31-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முழு கூடுதல் பொறுப்பு இயக்குநர் வே.விஷ்ணு இன்று (ஜன.27) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 31-ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமா, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம், பி.எஸ்சி/எம்.எஸ்சி நர்சிங் ஆகிய கல்வித்தகுதியை உடைய மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

9 days ago

வேலை வாய்ப்பு

19 days ago

வேலை வாய்ப்பு

26 days ago

வேலை வாய்ப்பு

27 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்